சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவக்கம்
சிபிஎஸ்இ., பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன. நாடு முழுவதும் 28 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வுகளை எழுத உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4 ம் தேதி வரையிலும், ப்ளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 13 ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 17,574 சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். 4453 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்த ஆண்டு, பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு வினாதாள்களை பெரிதுபடுத்து பார்த்து விடை எழுதுவதற்காக கம்யூட்டர் அல்லது லேப்டாப் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இந்த கம்யூட்டரில் மாணவர்கள் வினாக்களை தெளிவாக பார்த்து, விடைகளை டைப் செய்ய மட்டும் முடியும்.