கேந்திரிய வித்யாலயா, பள்ளிகளில் அட்மிஷன்
மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்புக்கு, மாணவர் சேர்க்கை பதிவு, நேற்று துவங்கியது.மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. நாடு முழுவதும், 1,136 கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. சென்னையில், ஏழு பள்ளிகள் உட்பட, தமிழகத்தில், 45 பள்ளிகள் உள்ளன.இந்நிலையில், நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' பதிவு, நேற்று துவங்கியது. வரும், 19ம் தேதி வரை அவகாசம் உள்ளது. http://admission.kvs.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம். முதல் நாளான, நேற்று ஆயிரக்கணக்கான பெற்றோர், அவசர கதியில் ஆன்லைன் பதிவை, ஒரே நேரத்தில் துவங்கினர். அதனால், இணையதளம் முடங்கியது; பின், மாலையில் நிலைமை சீரானது. இரண்டாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைன் பதிவு, ஏப்., 2ல் துவங்கி, 9ல் முடிகிறது.