சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகை பெற நிபந்தனை
சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற வேண்டும் எனில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், கல்வி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ., - ஐ.டி.சி., பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள் போன்றவற்றை படிக்கும், கிறிஸ்தவ, புத்த, சீக்கிய, ஜைன, பார்சி மதத்தை சார்ந்த சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு, அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதில் பயன் பெற, அனைத்து கல்வி நிறுவனங்களும், www.scholarships.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்து, பயனீட்டாளர் குறியீடு பெற்றுள்ளதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி, மார்ச், 31. பதிவு செய்துள்ள கல்வி நிறுவனங்கள் மட்டுமே, இந்த கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற முடியும். மேலும், விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.