கம்ப்யூட்டர் ஆசிரியர் கனவுக்கு வேட்டுவைக்கும் தமிழக அரசு!
கம்ப்யூட்டர் ஆசிரியர் ஆவோம் என்ற இளைஞர்களின் கனவுகளை தகர்த்துள்ளது தமிழக அரசின் நடவடிக்கை.
தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது
அதில், 3ம் வகுப்பில்ீ கம்ப்யூட்டரை ஒரீ பாடமாக சேர்க்க ஆலோசனைீ நடந்துவருகிறது.ீ
கம்ப்யூட்டர் கற்பிக்க வசதியாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டம், பட்டமேற்படிப்பு படித்தவர் பிஎட் முடித்துள்ளனர்.
இவர்கள் சுமார் 40ஆயிரம் பேர் தமிழகத்தில் உள்ளனர்.
இவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தனர்.
பதவியில் தொடர்பவர்களும், பதவி கிடைக்காமல் போனவர்களும் இதனை ஒரு பிரச்சனையாகவே இப்போது பார்ப்பதில்லை.
எனவே, தனியார் கல்வி நிறுவனங்களில் ரூ.5ஆயிரம் சம்பளத்தில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பெரும்பான்மையோர் இருந்து வருகின்றனர்.
புதிய பாடத்திட்டம் அறிமுகமான பின்னர் தங்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
ஆனால், அறிவியல் பாடத்தோடு ஒரு பாடமாக கம்ப்யூட்டர் அறிவியலை இணைத்துவிடலாம்.
அறிவியல் ஆசிரியர்களுக்கு குறுகியகால பயிற்சி அளித்து அவர்களை கம்ப்யூட்டர் கற்றுத்தர சொல்லலாம் என்று அரசு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் கனவை தகர்த்துள்ளது.
பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஒசங்க மாநில பொதுச் செயலாளர் குமரேசன் இதுகுறித்து கூறுகையில்,
ஆசிரியர்கள் தேர்வெழுத(டெட், டிஆர்பி) கம்ப்யூட்டர் மற்றும் பிஎட் படித்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கம்ப்யூட்டர் படித்தவர்களையே கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
கல்வி அதிகாரி பதவிக்கான போட்டித்தேர்வுகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக கல்வி அமைச்சரிடம் 36 முறை மனுவும், அரசுக்கு 63 மனுக்கள் அளித்தும் பயனில்லை.
ஹேங்கான கம்ப்யூட்டரைப்போன்று மவுனம் சாதித்து வருகிறது.