நுகர்வோர் விழிப்புணர்வு புதிய பாடம்
நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தும், புதிய பாடத்திட்டத்தை, யு.ஜி.சி., தயாரித்து வெளியிட்டுள்ளது.நுகர்வோர் விவகாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 குறித்த விழிப்புணர்வை, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், புதிய பாடத்திட்டத்தை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு தயாரித்துள்ளது. அதன்படி, இளநிலை பிரிவில், மாணவர்கள் விருப்ப பாடமாக, 'நுகர்வோர் பாதுகாப்பு' தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான பாடத்திட்டத்தை, பல்கலை மானியக்குழு தயாரித்து, www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பல்கலை, கல்லுாரிகள் விருப்பப்பாட பட்டியலில், நுகர்வோர் பாதுகாப்பு என்ற பிரிவை இணைக்கவும், இதுகுறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.