அதிநவீன செயற்கைக்கோள் ஜனவரி 20ம் தேதி விண்ணில் பாய்கிறது
இயற்கை பேரிடர் காலங்களில் வான் மற்றும் கடல் வழி பயணத்திற்கு வழிகாட்டும் அதி நவீன செயற்கைக்கோள் ஜனவரி மாதம் 20ம் தேதி காலை 9.31 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏழு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன்படி ஏற்கெனவே நான்கு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
தற்போது ஐந்தாவது செயற்கைக்கோள் வரும் 20ம்தேதி காலை 9.31 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.