சி.ஏ. மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பி.காம்., எம்.காம். படிப்புகள்: இக்னோ பல்கலை.யில் அறிமுகம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனம், கம்பெனி செக்ரட்டரிஷிப் நிறுவனம், இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்ட் அக்கவுண்டன்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இக்னோ பல்கலைக்கழகம் நிதி, வரி உள்ளிட்ட பாடங்கள் தொடர்பான சிறப்பு பி.காம், எம்.காம். படிப்புகளைத் தொலைதூரக்கல்வி திட்டத்தில் வழங்குகிறது.
இந்த படிப்புகளில் சிஏ, ஏசிஎஸ், ஐசிடபிள்யூ மாணவர்கள் சேரலாம். அவர்கள் தங்கள் தொழில்சார்ந்த படிப்புகளைப் படித்துக்கொண்டே தொலைதூரக்கல்வியில் சிறப்பு பிகாம், எம்காம் படிப்புகளையும் படிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்களைச் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கும் இக்னோ மண்டல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.750. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி ஆகும்.
இந்த சிறப்பு படிப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.