தேசிய கொடி ஏற்றிய நேர்மை மாணவன்
கொடுங்கையூர், சாலையில் கிடந்த பணத்தை, போலீசில் ஒப்படைத்த, 13 வயது மாணவனின், நேர்மையை பாராட்டும் வகையில், தனியார் பள்ளி நிர்வாகம், அந்த மாணவனை, தேசியக் கொடி ஏற்ற வைத்து, கவுரவப்படுத்தியது.சென்னை, திருவொற்றியூர், வெள்ளாளர் செட்டி மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன், இப்சன், 13. இவர், டிச., 9ல், பள்ளி முடித்துவிட்டு வரும் வழியில், ஒரு பணப்பை கிடப்பதை பார்த்தார். அதில், 21 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.பணப்பையை, அருகில் இருந்த திருவொற்றியூர் போலீசில், இப்சன் ஒப்படைத்தார். மாணவனின் செயலை பாராட்டி, செய்திகள் வெளியாகின.இதையடுத்து, கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் உள்ள, ஸ்ரீ சாய் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், 69வது குடியரசு தினத்தையொட்டி, இப்சனை, தங்கள் பள்ளியில், தேசியக் கொடியை ஏற்ற வைத்து, கவுரவப்படுத்தியது.இதையடுத்து, பள்ளி தாளாளர், டி.எஸ்.தியாகராஜன், நேர்மைக்கான
விருது மற்றும் பரிசு வழங்கினார்.