1, 2ம் வகுப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது
ம.பி.,யில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண்களுக்கு பதிலாக, 'ஸ்மைலி' படங்கள் மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில கல்வித் துறையின் கீழுள்ள, ராஜ்ய சிக் ஷா கேந்திரா, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கல்விக்கான பாடத் திட்டங்களை வகுத்து வருகிறது.
தேர்வுகளில் மதிப்பெண்கள் வழங்குவதால், குறைந்த மதிப்பெண் பெறும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பெற்றோரின் நெருக்குதலுக்கு ஆளாகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண்களுக்கு பதில், 'ஸ்மைலி' படங்கள் மூலம் மதிப்பீடு செய்ய, ராஜ்ய சிக் ஷா கேந்திரா திட்டமிட்டு உள்ளது.
'மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், உடனடியாக இதை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.