தேசிய அடையாள அட்டை, ஆதார் பதிவு: மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் சிறப்பு முகாம்கள்
சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ஆதார் பதிவு, தேசிய அளவிலான அடையாள அட்டைகள் மற்றும் உபகரணங்களுக்கான விண்ணப்பம் பெறுதல் உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான சிறப்பு முகாம்கள் ஜன. 25-ம் தேதி அசோக் பில்லர் அருகில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் இயங்கிவரும் மாநில வள மற்றும் பயிற்சி மையத்திலும், ஜன. 31-ம் தேதி அடையாறு காந்தி நகர் செயின்ட் லூயிஸ் காது கேளாதோர் பள்ளியிலும், பிப். 1-ம் தேதி அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி எதிரில் அமைந்துள்ள ஆந்திர மகிள சபா மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியிலும், பிப். 7-ம் தேதி பெரம்பூர் ராகவன் தெருவில் உள்ள புத்துயிர் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியிலும் பிப். 8-ம் தேதி பழைய வண்ணாரப்பேட்டை வீராகுட்டி தெருவில் அமைந்துள்ள ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு சிறப்பு பள்ளியிலும் நடை பெறும்.
முகாமிலேயே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், மருத்துவ சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஆகிவற்றை சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்திக்