தன்னாட்சி தடையின்மை: யு.ஜி.சி., 30 நாள் கெடு
தன்னாட்சி சார்ந்த கல்லுாரிகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து, தடையின்மை வழங்க, பல்கலை நிர்வாகங்களுக்கு, 30 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை மானியக்குழு தெரிவித்துள்ளது. தன்னாட்சி கல்லுாரிகள், தற்போது, தேர்வுகள் நடத்துதல், விடைத்தாள் மதிப்பீடு செய்தல், முடிவுகள் அறிவித்தல், பாடத்திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல், பல்கலையின் முன் அனுமதியுடன் புதிய பாடப்பிரிவுகளை துவக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு, அரசு உதவிபெறும் தன்னாட்சி கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., சார்பில் ஆண்டு தோறும் நிதியும் வழங்கப்படுவது வழக்கம்.தற்போது, அதிகார வரம்புகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, திருத்திய வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில்
தன்னாட்சி பெறும் கல்லுாரிகளுக்கு, புதிய பாடப்பிரிவுகள் துவங்குதல், கட்டண நிர்ணயம், பாடப்பிரிவுகளின் பெயர் மாற்றம் போன்றவற்றில், கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தன்னாட்சிக்கு விண்ணப்பிக்கும் கல்லுாரிகளின் விண்ணப்பங்களை, பல்கலை தரப்பில்
30 நாட்களுக்குள் பரிசீலித்து யு.ஜி.சிக்கு., அனுப்பவேண்டியது அவசியம். 30 நாட்களுக்குள் அனுப்ப தவறினால், தன்னாட்சி வழங்க தடையில்லை என கருதி, அதற்கான பணிகள் துவக்கப்படும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.