எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
இக்னோ பல்கலைக்கழகத்தில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு பாடங்களில் முதுகலை, இளங்கலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இவற்றில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக கல்வி நிதி திட்டத்தின் கீழ் கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இச்சலுகையின் கீழ் தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்பும் எஸ்சி, எஸ்சி மாணவ-மாணவிகள் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (தொலைபேசி எண் 044-26618040) விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31-ம் தேதியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.