50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்கள் தேர்வு: ரயில்வே விரைவில் அறிவிப்பு
2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு www. indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் வாயிலாக பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் 18 முதல் 31 வயது வரை தகுதியாக நிர்ணயிக்கப்படும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளைப் போன்றே முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படும். மாத ஊதியமாக ரூ.5 ஆயிரத்து 200 முதல் ரூ.20 ஆயிரத்து 200 வரை அடிப்படை சம்பளமாக வழங்கப்படும்.
இதுகுறித்து அறிவிப்புகள் www. indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் விரைவில் வெளியிடப்படும் என்பதால் தொடர்ந்து இணையத்தில் தொடர்பில் இருக்கவும்.