மத்திய அரசு பணிகள் 11 சதவீத இடங்கள், காலி
மத்திய அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், 4.12 லட்சம் இடங்கள், அதாவது, 11 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு பணியிடங்கள் குறித்த அறிக் கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: கடந்த, 2013 மார்ச், 1 நிலவரப்படி, ஆறு லட்சம் பணியிடங்கள் காலியாக இருந்தன. அது, 2014 மார்ச், 1ல், 4.21 லட்சமாக குறைந்தது. 2016 மார்ச், 1 நிலவரப்படி, இது, 4.12 லட்சமாக இருந்தது. மொத்தம் ஒதுக்கப்பட்ட மத்திய அரசு பணியிடங்கள், 36.34 லட்சம். அதில், 4.12 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. அதாவது, மொத்தம் ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், 11 சதவீதம் காலியாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது