10 ரூபாய் நாணயம் அனைத்தும் செல்லும்
இதுவரை வெளியிடப்பட்டுள்ள, 14 வகையான, 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்' என, ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: புழக்கத்தில் உள்ள, 10 ரூபாய் நாணயங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சில சந்தேகங்களால், அதை ஏற்பதற்கு சில வணிகர்களும், பொதுமக்களும் தயங்குவதாக தகவல்கள் வந்துள்ளன; இதில் எந்தக் குழப்பமும் இல்லை. தற்போது, 14 வகையான, 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன; அவை அனைத்தும் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 'சாக்லேட் பிரவுன் நிறத்தில் புதிய, 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்' என, ரிசர்வ் வங்கி சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஏற்கனவே, புழக்கத்தில் உள்ள நோட்டுகளும் செல்லும் என, அறிவிக்கப்பட்டது.