அரசு பள்ளி வகுப்பறையில் சி.சி.டி.வி.கேமிரா
டில்லியில் அனைத்து அரசு பள்ளிகளில் வகுப்பறையில் கட்டாயம் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
அரியானாவில் கடந்த ஆண்டு குர்கான் பள்ளியில் 7 வயது மாணவர் கொல்லப்பட்டது. டில்லி காந்திநகரில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது சம்பங்களால் சி.பி.எஸ்.இ. கவலையடைந்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இது குறித்த துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கெஜ்ரிவால் அரசுக்கு உத்தரவிட்டார். முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை செயலர்கள்,அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் கெஜ்ரிவால் கூறியது, இனி டில்லியில் அரசு பள்ளிகளில் வகுப்பறைகளில் கட்டாயம் சி.சி.டி.வி. கேமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் நேரடி ஒளி பதிவு மாணவர்களின் பெற்றோர்களுக்கு அவ்வப்போது காண்பிக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருகிறார்கள் என்பதையும் தங்களின் பிள்ளைககளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பெற்றோரே உறுதி செய்து கொள்ளலாம். இன்னும் மூன்று மாதத்திற்குள் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றார்.