சி.பி.எஸ்.இ., தேர்வு மார்ச் 5ல் துவக்கம்
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான தேதியை, சி.பி.எஸ்.இ., வாரியம், நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 12ல் முடிவடைகின்றன. முதல் தேர்வாக, ஆங்கிலம் நடத்தப்படுகிறது. 10ம் வகுப்புக்கு பள்ளி அளவிலான தேர்வு, ரத்து செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு, மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 4ல் முடிவடையும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில், மொத்தம், 20 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.