பிளாஸ்டிக் தேசிய கொடி : மத்திய அரசு திடீர் தடை
'பிளாஸ்டிக்கால் ஆன தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம்' என, மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
வரும், 26ம் தேதி, குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விபரம்:
மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிப்பதாக, தேசியக் கொடி உள்ளது. எனவே, தேசியக்கொடிக்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக்கால் ஆன தேசியக் கொடிகளை அப்புறப்படுத்துவது, நடைமுறைக்கு ஒவ்வாதது. எனவே, தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது, காகிதத்தால் ஆன தேசியக் கொடிகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கொடிகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.