31 செயற்கைக்கோள்கள் 12ம் தேதி செலுத்த திட்டம்
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, வரும், 12ம் தேதி, 31 செயற்கைக்கோள்களுடன், 'பி.எஸ்.எல்.வி - சி40' ராக்கெட் ஏவப்பட உள்ளது.
கடந்தாண்டு, ஆக., 31ம் தேதி, பி.எஸ்.எல்.வி - சி40 ராக்கெட் மூலம், செயற்கைக் கோள்களை ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், அதேபோன்ற ராக்கெட் மூலம், 31 செயற்கைக் கோள்களை, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், 12ம் தேதி ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களில், இந்தியாவின் நானோ, மைக்ரோ மற்றும் கார்டோசாட் - 2, செயற்கைக் கோள்களும் இடம் பெறுகின்றன. கார்டோசாட் செயற்கைக்கோள், உயர் தர படங்களை, நகர்ப்புறம் மற்றும் ஊரக தேவைகளுக்காக அனுப்பி வைக்கும். சாலை கட்டமைப்பு கண்காணிப்பு பணிகளுக்காகவும், இத்தகைய படங்களை பயன்படுத்த முடியும்