மாணவர்கள் பட்டியல்; கவனமாக கையாள அறிவுறுத்தல்
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிப்பில்,எந்த தவறும் நேர்ந்து விடக்கூடாது என, பள்ளி தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு களுக்கான ஆயத்த பணி கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுாகா வாரியாக, கடந்த கல்வியாண்டில் அமைக்கப்பட்ட மையங்களின் எண்ணிக்கை, நடப்பாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, அதிகரிக்க வேண்டிய மையங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தேர்வு எழுத உள்ள மாணவர் பட்டியல் தயாரிப்பில், தவறுகளுக்கு இடமளிக்கக் கூடாது. மாணவர் பெயர், விவரம், முகவரியை பெற்று, அதை பதிவு செய்யும்போது, ஆசிரியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மாணவன் பெயர், தந்தை பெயர் சரியா என்பதை, மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியலில் தவறு இருந்தால், யாரால் தவறு நேர்ந்தது என்பதை கண்டறிந்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.