தேர்ச்சி பெறாத ஆன மாணவர்கள் பாலிடெக்னிக் தேர்வு எழுதலாம்
பாலிடெக்னிக் தேர்வில், தேர்ச்சி பெறாத பழைய மாணவர்கள், மீண்டும் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில், வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்தில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான, பட்டயத் தேர்வு நடைபெற உள்ளது.
கருணை : இந்தத் தேர்வின்போது, 'ஓ.ஆர்., - என்.ஆர்., - ஆர்.ஆர்., - ஆர்.எஸ்., - சி, டி, ஜி, ஜெ., மற்றும் கே' ஆகிய பாடத்திட்டங்களில் நிலுவை வைத்துள்ள, முன்னாள் மாணவர்கள், சிறப்பு கருணை அடிப்படையில் தேர்வு எழுத, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2011 ஆண்டுக்கு முன், மூன்று ஆண்டுகள் முழு நேர படிப்பிலும், 2010க்கு பின், நான்காண்டு பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும், 500 ரூபாய் கட்டணமாகவும், 30 ரூபாய் மதிப்பெண் கட்டணமாகவும், 25 ரூபாய் பதிவுக் கட்டணமாகவும், தாங்கள் படித்த கல் லுாரி முதல்வரிடம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.
தட்கல் முறை : அபராதமின்றி கட்டணம் செலுத்த, பிப்., 7 கடைசி நாள். ௧௦௦ ரூபாய் அபராதத்துடன், கட்டணம் செலுத்த, பிப்., 14 கடைசி நாள். தட்கல் முறையில், 500 ரூபாய் அபராதத்துடன், கட்டணம் செலுத்த, மார்ச், 9 கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.