ஆண்டு தேர்வுக்காக படிக்கும் மாணவர்களே உங்களுக்கான குறிப்பு
பத்து, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கேள்விகளை திறம்பட படிக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உதவிகரமாக இருக்க வேண்டும். மொபைல் போண்கள் பயன்படுத்தும் பழக்கத்தை மாணவர்கள் மூன்று மாதத்திற்கு விடுங்கள். உங்களது தேர்வுக்கான நேரம் இது இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் உங்களது கையில் முழுவதுமாக இருக்கின்றது.
மாணவர்கள் மாணவர்கள் ஆசிரியர்களின் சொல்லை கடைப்பிடியுங்கள் கொஞ்சம் கஷ்டப்படுங்கள் அது உங்களை வலிமை படுத்தும். நன்றாக படித்தலுடன் ஆசரியர் வைக்கும் டெஸ்டுகளில் பங்கேற்று தவறுகளை திருத்தி கொள்ளவும். உங்களுடைய மேல்நிலை கல்விகள் உங்களை சிறப்பாக உருவாக்கும். நீங்கள் சிறபபாக படித்தலுடன் அவற்றை தொடர்ந்து ரிவைஸ் செய்து வைத்து கொள்ளுங்கள். மாலை நேரத்தில் பள்ளியில் கடுமையாக படித்துவிட்டேன் ஆதலால் நான் கொஞ்சம் சாப்பிடனும் என்று பள்ளிக்கு வெளியே உள்ள சாட் அயிட்டங்களை வாங்கி தின்னும் பழக்கங்களை விடுங்கள். அது உடல் நலத்திற்கு கேடு விழைவிக்கவும். நீங்கள் எந்த அளவிற்கு உங்களது உடலையையும் மனதையும் தேர்வுக்கு தயாராக்குகின்றிர்களோ அந்தளவிற்கு நீங்கள் எளிதாக உங்களது இலக்கை அடையலாம. மாணவர்களே உங்களுக்கான தேர்வு உங்களது உயர்ப் படிப்புக்கான தேர்வு ஆகையால் அது குறித்து நீங்கள் தீர்மானித்து படிக்க வேண்டும். படித்தலுடன் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். வெற்றியை பெற மாணவர்கள் மெனகெட வேண்டும். பெற்றோர்களே உங்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் நீங்கள் அதிகமாக கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் டிவி, மொபைல் பய்ன்பாட்டை குறைத்து உங்கள் பிள்ளைகளுக்கான தேவையறிந்து செய்து கொடுங்கள். பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் நீங்கள் டிவி பார்க்காமல் பிள்ளைகளை கவனித்தால் பிள்ளைகள் உங்களை கவனிப்பார்கள் என்பதை மறக்காதிர்கள். அதட்டலும் திட்டலும் கொண்டு பிள்ளைகளை வழிக்கு கொண்டு வருவதை விடுத்து அன்பாக பிள்ளைகளிடம் பேசி அவர்களை படிக்க வையுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கான சரிவிகித உணவு வழங்குகங்கள் .ஸ்பெஷல் வகுப்புகள் ஏதேனும் இருப்பின் அவர்களுக்கு உதவுங்கள் இதுவே நலம் பயக்கும். சமுக வலைதளங்களில் வாழும் மாணவர்களா நீங்கள் அப்படியெனில் மூன்று மாதம் தேர்வை முடித்தப் பின் நீங்கள் பயன்படுத்துங்கள் தேர்வை வெல்ல உங்களது டெடிகேசன் மற்றும் போகஸ் உங்களை வழிநடத்தும். ஸ்பெஷல் கிளாஸ்கள் மற்றும் டியூசன் போன்ற வகுப்புகளில் நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருந்தால் மட்டும் செலுத்துங்கள். இல்லையெனில் சொந்தமாக படிப்பதே சரியென கருதினால் அதுவும் நன்றுதான்.