பள்ளியில் 40 யூனிட் மின் உற்பத்தி
ஈரோடு மாநகராட்சி பள்ளியில், சோலார் பேனல் மூலம் தினமும், 40 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.ஈரோடு, இடையன்காட்டுவலசில், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்டமாணவர்கள், 16 ஆசிரியர்கள் உள்ளனர். 60 மின்விசிறிகள், 60 டியூப் லைட்கள் உள்ளன. தினமும் காலை 9:00 -மாலை 5:30 மணி வரை, பள்ளி செயல்படும்.
கடந்த, 2016 ஜூனில், பள்ளி மொட்டை மாடியில், ஈரோடு மாநகராட்சி சார்பில், 10 கே.வி., திறன் கொண்ட சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டன. அன்று முதல், தற்போது வரை, தினமும் சராசரியாக, 40 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு, மீட்டரில் பதிவாகிறது. மின் உற்பத்தியின் மொத்த அளவு, பள்ளி கணக்கில் எழுதி வைக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் சிவக்குமார், ''பள்ளியில் மின் கட்டணம் செலுத்
தியதே இல்லை. இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து, சோலார் பேனல் மூலம் உற்பத்தி செய்யப்
படுகிறது,'' என்றார்.