அண்ணா பல்கலை பகுதி நேர படிப்பு: இன்று பதிவு துவக்கம்
அண்ணா பல்கலையில் பகுதி நேர படிப்புக்கான விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. டிப்ளமா முடித்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், பி.இ., - பி.டெக்., படிப்புகளை, பகுதி நேரமாக படிக்க, அண்ணா பல்கலையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
சென்னை, கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி மற்றும் காரைக்குடி அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி ஆகியவற்றில், இந்த ஆண்டுக்கான பகுதி நேர படிப்புக்கான சேர்க்கை துவங்க உள்ளது. படிப்பில் சேர விரும்புவோர், https://www.annauniv.edu/Advertisement_bept2018.pdf என்ற இணையதளத்தில், இன்று முதல் விபரங்களை பதிவு செய்யலாம்.