இக்னோ படிப்பில் சேர ஜனவரி 31 வரை அவகாசம்
தொலைநிலை படிப்பில் சேர, வரும், 31 வரை விண்ணப்பிக்கலாம்' என, இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ' அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இக்னோ சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இக்னோ பல்கலையில், முதுநிலை, இளநிலை பட்டம், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்பம் அனுப்புவதற்கான கால அவகாசம், வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். எம்.பி.ஏ., - சி.எஸ்., மற்றும் சி.ஏ., படிப்புகளுக்கான சிறப்பு பி.காம்., படிப்பில் சேர, தனி கையேடு வழங்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை பெற, 044 - 2661 8438, 2661 8039 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். rcchennai@ignou.ac.in என்ற இணையதளத்திலும் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.