15 பொதுத்துறை வங்கிகள் விரைவில் மூடலா?
நாட்டில் உள்ள, 15 பொதுத்துறை வங்கிகள், விரைவில் மூடப்பட்டு, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளதாக, தகவல் பரவி வருகிறது.
பாரத ஸ்டேட் வங்கி யின், ஐந்து துணை வங்கிகள், சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டன. அவை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், நாட்டில் உள்ள, 15 பொதுத்துறை வங்கிகள், விரைவில் மூடப்பட உள்ளதாகவும், அவை, ஐந்து பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளதாகவும், தகவல் பரவி வருகிறது. அதனால், அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள், கலக்கம் அடைந்துள்ளனர். எனினும், அது, தவறான தகவல் என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, அனைத்து இந்திய வங்கி ஊழியர் அமைப்பின் பொதுச்செயலர், வெங்கடாசலம் கூறுகையில், ''இது தவறான தகவல். இப்போதைக்கு, அது போன்ற முடிவு எதையும், வங்கி நிர்வாகங்கள் எடுக்கவில்லை,'' என, விளக்கம் அளித்தார்.