சிறுவர்களுடன் பெற்றோர்கள் எப்போதும் தொடர்பிலிருக்க புதிய வயர்லெஸ் சாதனம்:
அமெரிக்காவை சேர்ந்த Republic Wireless எனும் பிரபலமான நிறுவனம் புதிய சாதனம் ஒன்றினை வடிவமைத்துள்ளது. வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய இந்த Walkie-Talkie சாதனமானது சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை எப்போதும் இணைத்து வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கும்.
சட்டைப் பையில் வைத்திருக்கக்கூடிய அளவிற்கு மிகவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 4G LTE அல்லது WiFi வலையமைப்பினைக் கொண்டிருப்பதனால் தொடர்பு எல்லை வரையறையற்றதாக இருக்கின்றது.
மேலும் சிறுவர்கள் இருக்கும் இடங்களை காட்டக்கூடியதாகவும் இருப்பதால் அவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் சாத்தியம் அதிகமாகவுள்ளது. Google Assistant வசதி மியூசிக் பிளே வசதி என்பனவும் இச் சாதனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்