ஓட்டுனர் உரிம முறைகேடு தடுக்க நடவடிக்கை : டிஜிட்டல்மயமாகும் டெஸ்ட் டிராக் குகள்
தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் வழங்கப் பயன்படுத்தும் சோதனை மைதானங்கள் (டெஸ்ட் டிராக்) டிஜிட்டல் மயமாகிறது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஊழல் தாண்டவமாடுகிறது. தகுதியற்ற பலருக்கு லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த முறைகேட்டை தடுப்பதற்காக வட்டார போக்குவரத்து அலுவலக மைதானங்கள் 'டிஜிட்டல்' மயமாக
உள்ளன. டிஜிட்டல் மைதானங்களில் அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படும்.
டிரைவிங் லைசென்சுக்கு விண்ணப்பிப்போர், டூவீலருக்கு '8' போட வேண்டும். நான்கு சக்கர வாகனங்களுக்கு 'எஸ்' வளைவு, 'எச்' வடிவங்களிலும், பாலம் (ரேம்ப்) மாதிரியான
இடத்திலும் வாகனத்தை ஓட்டிக்காட்ட வேண்டும்.விண்ணப்பதாரர் ஓட்டிக் காட்டுவதை கேமராவில் கண்காணித்து கம்ப்யூட்டரே மார்க் போடும். ஓட்டத் தெரியாதவர்களை கம்ப்யூட்டரே நீக்கிவிடும். இதனால் சிபாரிசுகள் தடுக்கப்பட்டு, திறமையானவரே லைசென்ஸ் பெற முடியும்.
இந்த நடவடிக்கைகளுக்காக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள மைதானங்களும் ஹெலிகாப்டர் மூலம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் சென்னை போக்குவரத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரசு ஒப்புதலுக்குப் பின் புதிய ஆண்டில் இந்த முறை அமல்படுத்தப்படலாம் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.