சொத்து வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை
சொத்துக்கள் பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் இது தொடர்பான கேள்விக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரக விவகாரத் துறை இணையமைச்சர், ஹர்தகீப் சிங் புரி, எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
சொத்துக்களை பதிவு செய்யும் போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை. அதே நேரத்தில், சொத்துக்கள் பதிவு செய்யும்போது, விருப்பத்தின் அடிப்படையில், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது குறித்து பரிசீலிக்கும்படி, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.