மானிய உரத்திற்கு ஆதார் ஜன.1 முதல் அவசியம்
'ஜன.1 முதல் விவசாயிகள் மானிய விலையில் உரம் வாங்க ஆதார் கார்டு அவசியம்' என, வேளாண்மை துறை அறிவித்துள்ளது.விதைகள், இடுபொருள்கள், உரம், டிராக்டர்,
இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கு கின்றன.உரங்களுக்கு 80 முதல் 90 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியம் நேரடியாக உரம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும். சில உர விற்பனையாளர்கள் போலியான உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்கின்றனர்.
இதை தடுக்க கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 'பாயின்ட் ஆப்சேல்' கருவி வழங்கப்பட்டுள்ளது.அந்த கருவியில் உரம் வாங்க செல்லும் விவசாயிகள் ஆதார் எண் மற்றும் கை விரல் ரேகையை பதிவு செய்த பின்னரே, உரம் வாங்க முடியும். இதன்
மூலம் விவசாயிகள் அல்லாதோர் பிற தேவைகளுக்கு உரம் வாங்குவது தடுக்கப்படும்.இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஜன.1 முதல் மானிய விலையில் உரம் வாங்க விவசாயிகளுக்கு ஆதார் கார்டு அவசியம்.
இனி சாதாரண நடைமுறையில் உரம் வாங்க இயலாது. ஆதார் கார்டு உரம் வாங்க
செல்பவரின் கார்டாக இருந்தால் மட்டுமே உரம் வழங்கப்படும். கலப்பு உரம், உயிர் உரம் மற்றும் நுண்ணுாட்ட உரங்களுக்கு மானியம் கிடையாது, என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.