புதிய 500 ரூபாய் அச்சடிக்க ரூ.4.9 கோடி செலவு
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் புதிய 500 ரூபாய் அச்சடிக்க ரூ.4,968 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பார்லி.,யில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் 1,695.7 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. இதற்காக ரூ.4,968 கோடி செலவிடப்பட்டது. 365.4 கோடி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 1,293.6 கோடி செலவிடப்பட்டது. இதேபோல் 178 கோடி 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 522.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
மேலும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப்பின், 7,961 கோடி கணக்கில் காட்டாத பணத்தை வருமான வரித்துறையினர் கண்டிபிடித்துள்ளனர். இவ்வாறு பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.