வருமான வரி தாக்கல் கெடு முடிந்தால் செல்லாது
'வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய, புதிய கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின், கணக்கு தாக்கல் செய்தால், அது செல்லாததாகி விடும்' என, வரித்துறை எச்சரித்து உள்ளது.
வருமான வரி வசூலில், தமிழ்நாடு -
புதுச்சேரி மண்டலம், நான்காம் இடத்தில் உள்ளது. அதை மேம்படுத்த, பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வருமான வரி படிவம் தாக்கல் செய்யாதது தொடர்பாக, 191 வழக்குகள்; வரி ஏய்ப்பு மற்றும் வரி செலுத்தாமை தொடர்பாக, 58; முறையாக வரி பிடித்தம் செய்யாமை மற்றும் பிடித்த வரியை செலுத்தாமை தொடர்பாக, 69 வழக்குகள் என, பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. 98 பேரின் சொத்துகள், பினாமி சட்டத்தில் பறிமுதல் செய்யப்பட உள்ளன.
மேலும், தன்னிச்சையாக வரி செலுத்தும் நிலையை உருவாக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக, சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2016 - 17ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கை, 2018 மார்ச்சுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள் தாக்கல் செய்யாவிட்டால், அது, செல்லாததாகி விடும் என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.