ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், மின்சாரம்?
ஜி.எஸ்.டி., வரம்பிற்குள், பெட்ரோல், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றை கொண்டு வர, கவுன்சில் திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., வரம்பிற்குள், பல பொருட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலில் இடம் பெற்றுள்ள மாநிலங்களின் நிதியமைச்சர்களின் தலைவரும், பீஹார் துணை முதல்வருமான, பா.ஜ.,வைச் சேர்ந்த, சுஷில் குமார் மோடி, டில்லியில் நேற்று கூறியதாவது:
ஜி.எஸ்.டி., வரம்பிற்குள், பெட்ரோலிய பொருட்கள், மின்சாரம், ரியல் எஸ்டேட், முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்பது, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் விருப்பம். ஆனால், இவை எப்போது கொண்டு வரப்படும் என, காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது.
பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வந்தால், அதன் விலை நிச்சயம் குறையும். இதே போல், மின்சாரம், ரியல் எஸ்டேட், முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவற்றையும், ஜி.எஸ்.டி., யில் கொண்டு வந்தால், முறைகேடுகள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.