அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாயுமா?
தாத்தா பெயரில் உள்ள சொத்தை பேரனுக்கு மாற்ற சார்பதிவாளர் லஞ்சம் கேட்டது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அவர் கூறுகையில், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை குண்டர் சட்டத்தில் ஏன் கைது செய்யக்கூடாது.ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களை தண்டிக்கும் வகையில் ஏன் தனித்தடுப்பு சட்டம் கொண்டு வரக்கூடாது.லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் பயன்படுத்துவதில்லைஅரசு துறைகளி்ல் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனை நடந்தது? அப்போது எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்.ஊழலை ஒழிக்க லஞ்ச ஒழிப்பு துறையிடம் என்ன மாதிரியான தொழில்நுபட்ப வசதிகள் உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு டிச.,11க்கு விசாரணையை ஒத்திவைத்தார்.