300 பொறியியல் கல்லூரிகள் விரைவில் மூடல்?
நாடு முழுவதும், 300 பொறியியல் கல்லுாரிகளில், அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க, ஏ.ஐ.சி.டி.யு., திட்டமிட்டுள்ளது. இந்த கல்லுாரிகள், விரைவில் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில், மொத்தம், 3,000 தனியார் பொறியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஆண்டு தோறும், 13.5 லட்சம் மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் அனுமதிக்கப்படுகின்றனர். இவற்றில், 300க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 30 சதவீத இடங்கள் மட்டுமே
நிரப்பப்படுகின்றன.
இந்த கல்லுாரிகளை விரைவில் மூட, ஏ.ஐ.சி.டி.யு., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பிரபல கல்வி நிறுவனம் உட்பட, நாட்டின், நான்கு கல்வி நிறுவனங்கள் வழங்கிய பட்டம் செல்லாது என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளாக, 150க்கும் மேற்பட்ட, கல்வி நிறுவனங்களில், 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்புகின்றன. 800 கல்வி நிறுவனங்களில், 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பி வருகின்றன.
இவற்றில், 300 கல்வி நிறுவனங்களில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏ.ஐ.சி.டி.யு., தடை விதிக்கவுள்ளது.
இந்த ஆண்டோடு, பொறியியல் கல்லுாரி அந்தஸ்தை ரத்து செய்து, அவற்றை, கலை, அறிவியல் கல்லுாரிகளாகவோ, வேறு பயிற்சி நிறுவனங்களாகவோ மாற்றுவதற்கான உத்தரவு வெளியாகும்
என, தகவல் வெளியாகிஉள்ளது.