கம்ப்யூட்டர் மயமாகுது கால்நடை கணக்கெடுப்பு
கால்நடைகள் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படவுள்ளது.
கால்நடைகள் கணக்கெடுப்பு பணியில், என்.ஜி.ஓ.,க்கள் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் ஈடுபடுவர். இவர்கள் தரும் தகவல், ஆவணங்களில் பதிவு செய்யப்படும். இதில், துல்லியம் இருக்காது. இந்த ஆண்டு, 19வது கணக்கெடுப்பு பணியை துல்லியமாக செய்து, அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, கண்காணிக்க கால்நடை துறை முடிவு செய்துள்ளது. கிராமம், வட்டாரம், மாவட்டம் போன்றவற்றில், 1,600 வீடுகளுக்கு ஒரு கால்நடை துறை ஊழியர், கணக்கெடுப்பாளராக இருப்பார். இரு கணக்கெடுப்பாளருக்கு ஒரு மேற்பார்வையாளர் செயல்படுவார். இந்த குழுவில், கால்நடை உதவி டாக்டர், கால்நடை இன்ஸ்பெக்டர் இடம் பெறுவர். இவர்கள், கால்நடைகள் உள்ள வீடுகளுக்கு தனி எண் கொடுப்பர். இந்த எண் மூலம், அவர் வளர்க்கும் கால்நடைகள் குறித்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து, மாவட்ட தலைமையகங்களுக்கும், சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்திற்கும் அனுப்பப்படும். கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அடுத்த மாதம் கணக்கெடுப்பு பணியை துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இரு மாதங்களில், பணி முடிய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு கணக்கெடுப்பில், வீட்டில் உள்ள கால்நடைகளின் ரகம், பால் கொடுக்கும் அளவு, கன்றுகள் ஈன்றது போன்றவற்றையும் கம்ப்யூட்டரில் பதிய உள்ளனர்,'' என்றார்.