இன்டர்நெட்டில் மூழ்கினால் அதிக ரத்த அழுத்தம்
அதிகமான இன்டர்நெட் பயன்பாட்டினால் ரத்த அழுத்தமும், உடல் எடையும் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டெட்ராய்டு நகரிலுள்ள ஹென்றி போர்டு மருத்துவமனை டாக்டர்கள், 14 முதல் 17 வயதுடைய 335 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்ததாவது:
சராமரியாக வாரத்தில் 14 மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தும் 134 பேரில், 26 பேருக்கு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46 சதவீதத்தினர் அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக 25 மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில், மாணவர்கள் 43 சதவீதத்தினரும், மாணவிகள் 39 சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 26 சதவீதத்தினரும், அதிகமான அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 43 சதவீதத்தினரும் அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட் போனிலும், இன்டர்நெட்டிலும் மூழ்கி கிடக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, இந்த ஆய்வு முடிவு ஓர் பேரிடி என்பது உண்மையே.