கிருஷ்ணகிரி அணை ஷட்டரில் திடீர் உடைப்பு 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அணை, ஷட்டரில், திடீர் உடைப்பு 5 மாவட்டங்களுக்கு, வெள்ள அபாய ,எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துாரில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கே.ஆர்.பி., அணை கட்டப்பட்டுள்ளது. தற்போது, ௫௧ அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, திடீரென, அணையின், முதல் ஷட்டர் உடைந்தது. அணையில் இருந்து, 5,000 கன அடி தண்ணீர் வெளியேறியது.
முதல் ஷட்டரில், நீரின் உந்து சக்தி அதிகமானதால், அதை குறைக்க, ஐந்தாவது ஷட்டரில், 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், வினாடிக்கு, 6,000 கன அடி நீர், ஆற்றில் வெளியேறியது.
கலெக்டர்,கூறியதாவது: கே.ஆர்.பி., அணையின் ஷட்டர் சேதமாகி, அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை சார்பில், கிராமங்களில் தண்டோரா மூலமாகவும், எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.
அணையில், 10 ஆயிரம் கன அடிக்கு மேல், தண்ணீர் திறந்து விடும் போது மட்டுமே, அபாய சங்கு ஒலிக்கப்படும். நேற்று மாலை, 4:30 மணிக்கு அபாய சங்கு ஒலித்ததால், பெரியமுத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். ஏராளமானோர் திரண்டு வந்து, என்ன ஆனது என, விசாரித்தனர்.
'தற்போது, 51 அடி தண்ணீர் உள்ள நிலையில், ஷட்டர் சேதத்தை உடனடியாக சரி செய்யமுடியாது.'குறைந்தது, 10 அடி தண்ணீர் குறைந்தால் மட்டுமே, ஷட்டரை சரி செய்ய முடியும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அபாய சங்கு
அணையில், 10 ஆயிரம் கன அடிக்கு மேல், தண்ணீர் திறந்து விடும் போது மட்டுமே, அபாய சங்கு
ஒலிக்கப்படும். நேற்று மாலை, 4:30 மணிக்கு அபாய சங்கு ஒலித்ததால், பெரியமுத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பீதியடைந்தனர். ஏராளமானோர் திரண்டு வந்து, என்னஆனது என, விசாரித்தனர். அப்போது ஷட்டர் உடைந்த தகவல் அறிந்து அச்சமடைந்தனர்.
கே.ஆர்.பி., அணையில், தற்போது, 51 அடி தண்ணீர் உள்ள நிலையில், ஷட்டர் சேதத்தை உடனடியாக சரி செய்ய முடியாது. குறைந்தது, 10 அடி தண்ணீர் குறைந்தால் மட்டுமே, ஷட்டரை சரி செய்ய முடியும் என, பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.