பிரதமர் மோடியின் அடுத்த வியூகம் மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்க வங்கி காசோலைக்கு வருகிறது, வேட்டு
நாட்டில், மின்னணு பணப் பரிவர்த் தனைகளை ஊக்குவிக்க, வங்கி வாடிக்கை யாளர்களுக்கு வழங்கப்படும் காசோலை வசதியை, மத்திய அரசு திரும்பப் பெறக் கூடும்' என, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
மின்னணு,பண பரிமாற்றத்தை,ஊக்குவிக்க,வங்கி,காசோலைக்கு வருகிறது, 'வேட்டு'
இந்த அமைப்பின் தலைவர், பிரவீன் கந்தல் வால் பேசியதாவது:
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், ரொக்கப் பரிவர்த்தனைகள் சற்று குறைந்துள்ள நிலை யில், காசோலை வாயிலான பணப் பரிமாற்றம் அதிகரித்திருக்கும் என, மதிப்பிடபட்டு உள்ளது. அதனால், மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, வங்கி வாடிக்கையாளர்களுக்கான, காசோலை வசதியை திரும்ப பெறுவதுகுறித்து, மத்திய அரசு ஆலோசிப்பதாக தெரிகிறது.
இத்திட்டம் அமலானால், மின்னணு பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்பதுடன், ரூபாய்
நோட்டுகள் அச்சடிக்கும் செலவும் கணிசமாக குறையும்.தற்போது, மத்திய அரசு, ரூபாய் நோட்டு களை அச்சடிக்க, பல்லாயிரம் கோடி ரூபாயை செலவழிக்கிறது. இத்துடன், பணப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பிற்காகவும், கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. மின்னணு பணப் பரிவர்த் தனை அதிகரிக்க வேண்டுமென்றால்,இவ்வகை பரிவர்த்தனைகளுக்கு, அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
தற்போது, வணிகர்களின், 'கிரெடிட்' கார்டு பரிவர்த் தனைக்கு, வங்கிகள், 2 சதவீதம் செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கின்றன. இது, 'டெபிட்' கார்டு பரிவர்த்தனைக்கு, 1 சதவீதமாக உள்ளது. இந்த கட்டணத்தை, மத்திய அரசு, நேரடியாக வங்கி களுக்கு செலுத்தி, வணிகர்களின் நிதிச்சுமையை குறைக்கலாம். இதனால், சிறிய வணிகர்களும், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி, 2016 நவ., 8ல், பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு காரணமாக, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. டிசம்பரில், மின்னணுபணப் பரிவர்த்தனை, அதிகபட்சமாக, 100 கோடியை எட்டியது. இது, இந்தாண்டு செப்டம்பரில், 87.70 லட்சமாக குறைந்துள்ளது. இதை, நடப்பு நிதியாண்டிற்குள், 2.50 கோடியாக உயர்த்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
ஆனால், தற்போதைய சூழலில், இந்த இலக்கை
எட்ட வாய்ப்பில்லை என, தெரிகிறது.எனவே, வங்கி காசோலைக்கு தடை விதிப்பது, மின்னணு பரிவர்த்தனைக்கு மானியம் வழங்கு வது போன்றவற்றை, மத்திய அரசு செயல் படுத்த வாய்ப்புள்ளது.இது, பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புழக்கம் குறைந்தது
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், நாட் டில், 17.90 லட்சம் கோடி ரூபாய் உயர் மதிப்பு நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில், 91 சதவீதம், அதாவது, 16.3 லட்சம் கோடி ரூபாய், தற்போது புழக்கத்தில் உள்ளது. 2016 நவ., - 2017 செப்., வரை, மின்னணு பணபரிவர்த் தனைகள், 31 சதவீதம் அதிகரித்துள்ளன.