உருவாகிறது கமுதி மாவட்டம் : நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு?
ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து கமுதியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் பல கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. மாவட்டத்தின் கடைக்கோடியான மண்டலமாணிக்கம் ஊராட்சி முத்துப்பட்டியில் இருந்து
ராமநாதபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டி வந்தால், ஒருநாள் முன்பே
பயணித்து அங்கு தங்கி, ஆக வேண்டிய பணிகளை பார்க்க வேண்டும். அவ்வளவு சிரமங்கள் உள்ளன. இதுகுறித்து ஏற்கனவே வருவாய்துறை சங்கத்தினர், முதல்வரிடம் முறையீடு செய்தனர்.
இதையடுத்து கமுதியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு பணிகள் நடந்தன. இதன்படி கமுதி, கடலாடி, முதுகுளத்துார், திருச்சுழி, புதிதாக அமையவுள்ள பார்த்திபனுார் தாலுகாகளை உள்ளடக்கி புதிய மாவட்டம் அமைப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர், பரமக்குடி உதவி கலெக்டருக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.நவ., 25 ல் ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம் புதிய தாலுகாகள் அறிவிப்பும் வெளியாகலாம்.