பீம் செயலி மூலமான பரிவர்த்தனை உயர்வு
ஸ்மார்ட்போன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய உதவும் 'பீம்' செயலி மூலமான பரிவர்த்தனை அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் பீம் செயலியை அறிமுகம் செய்தது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான யு.பி.ஐ., மேடையை அடிப்படையாக கொண்டு செயல்படும் பீம் செயலி மூலமான வசதியை பங்வேறு வங்கிகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், அக்டோபர் மாதம், பீம் செயலியின் மூலமான பண பரிவர்த்தனை, 76 மில்லியனாக, 149 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பீம் செயலியின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் புதிய வெர்ஷனில் தனி நபர்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு உதவும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக ஊடகம் அல்லது மேசேஜிங் சேவை மூலம் பயனாளிகள் மற்றவர்களுக்கு செயலியில் இணைய அழைப்பு விடுக்கலாம்.அதேபோல, சிறு வர்த்தகர்கள் தங்கள் ஏஜென்ட்கள் அல்லது உதவியாளர்களை பணம் பெறக்கூடிய ஏஜென்ட்களாகவும் அமைத்துக் கொள்ளலாம்.