மரச்செக்கு எண்ணெய்க்கு மவுசு
மரச்செக்கு எண்ணெய்க்கு மவுசு
மரச்செக்கு ஆட்டிய எண்ணெய் பயன்படுத்த மக்கள் தொடங்கியுள்ளனர். செக்கு எண்ணெய்க்கு மவுசு அதிகரித்துள்ளதாக, இல்லத்தரசிகள்
தெரிவிக்கிறனர்.
நமது முன்னோர்கள் அக்காலத்தில் சமையலுக்கு மரச்செக்கில் ஆட்டிய எண்ணெயை பயன்படுத்தினர். அதிலும், சமையலுக்கு பயன்படுத்தும், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தினர்.
நாளடைவில் நாகரீக மாற்றத்தால், உண்ணும் உணவு பொருட்களில், நமது முன்னோர் பயன்படுத்தும் பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறியது.
தற்போது, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விதவிதமான பாட்டில்கள், பாக்கெட்டுகளில், அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கொழுப்பு சத்து இல்லாத எண்ணெய் என, தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய் என, பிற எண்ணெய் வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகமானோர், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்யை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
இதில், போலிக் அமிலம் மற்றும் பிற சத்துகள் நிறைந்துள்ளதால், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வாங்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து மரச்செக்கு உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: எள், நிலக்கடலை, தேங்காய் போன்றவற்றை செக்கில் போட்டு, எண்ணெய் தயாரிக்கிறோம்.
மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், விலை அதிகம் என்றாலும், இயற்கையோடு இணைந்த வாழ்வே ஆரோக்கியம் என்பதால், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், 200 ரூபாய் முதல், 250 வரை விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.