50 கோடியை தொடும் இன்டர்நெட் பயனாளர்கள்!
இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 50 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
50 கோடி பேர்: டில்லியில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தொட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், தற்போதே 40 கோடி பேர் இன்டர்நெட்டை உபயோகிக்கின்றனர். அடுத்த ஆண்டில்(2016) இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தொட்டுவிடும்.
மத்திய அரசு கவனம் : 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை ஆப்டிக் பைபர் கேபிள் மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் கல்வி, சுகாதார சேவைகளுக்கு திட்டம் பயன்படுத்தப்படுகிறதா என ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ் இன்டர்நெட் வழிக்கல்வி, தொலை தொடர்பு வசதி மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை, கிராமத்தின் நடுவில் வை-பை வசதியுடன் எல்.இ.டி., விளக்குகள் அமைத்தல் ஆகிய திட்டங்களில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.