NEET EXAM பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள், NEET பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர் கல்வியில் சேர, மத்திய அரசு, பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துகிறது. இவற்றில், மருத்துவத்துக்கான, நீட்; இன்ஜினியரிங்குக்கான, ஜே.இ.இ., ஆகிய தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் போன்ற, மாநில பாடத்திட்ட மாணவர்கள், அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.
இந்நிலையில், NEET, JEE, தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற, பிளஸ் ௨ மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதன்படி, SPEED என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 20 கோடி ரூபாய் செலவில், NEET தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம், அக்., 26 வரை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ON-LINE பதிவு அவகாசத்தை, அக்., 31 வரை நீட்டித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
பதிவுகளை மேற்எகாள்ள click here http://tnschools.chennaitouch.com/login
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே தலைமையாசிரியர்கள் மூலமாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
தாங்கள் விரும்பும் பயிற்சி மையத்தில் பயிற்சி வெறும் வண்ணம் பயிற்சி மையங்களை தெரிவு செய்து கொள்ளலாம்.