குழந்தை தொழிலாளர்களை தடுக்க சபரிமலையில் புது திட்டம்
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, பத்தினம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், நவ., முதல், மூன்று மாதங்களுக்கு, கோவில் தொடர்ந்து திறந்திருக்கும். இந்தாண்டுக்கான சீசன், நவ., 15ல் துவங்க உள்ளது. இந்த சீசனின் போது, சபரிமலையை, குழந்தை தொழிலாளர்கள் இல்லாத இடமாக மாற்றுவதற்கு, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநில குழந்தை பாதுகாப்பு அமைப்பின், மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
சபரிமலை சீசனின் போது, முக்கியமான இடங்களில், சிறுவர்கள், சிறு சிறு பொருட்களை விற்கின்றனர். தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து, அழைத்து வரப்படும் இந்த குழந்தைகள், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்தடுப்புச் சட்டத்தின் கீழ், சபரிமலையில் உள்ள கடைகளில், சிறார் தொழிலாளர்கள் இருக்கின்றனரா என, அவ்வப்போது சோதனை செய்யப்படுகிறது. மலைப் பாதையின் முக்கிய இடங்களில், கையில் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் குழந்தைகள் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தாண்டு, அதிரடி சோதனைகள் நடத்தி, நடவடிக்கை எடுக்க உள்ளோம்.