e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை
வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாட்டில், 2.9 கோடி பேர், வருமான வரி செலுத்துவதற்காக, 'பான் கார்டு' பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில், 60 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். அதனால், அனைத்து தரப்பினரையும், வருமான வரி வலையில் சேர்க்க, 2017 - 18ம் நிதியாண்டில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தாங்கள் அனுப்பும் தகவல்கள், உரிய வருமான வரி கணக்குதாரருக்கு போகிறதா என்பதை உறுதிப்படுத்த, வருமான வரித்துறை, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரியை, http://incometaxindiaefiling.gov.in என்ற எங்கள் இணையதளத்தில், ஏராளமானோர் செலுத்துகின்றனர். ஐந்து லட்சத்திற்கு அதிக வருவாய் உடையவர்கள், அந்த இணையதளத்தில், 'இ - பைலிங்' வாயிலாக, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம். அவர்களில் சிலர், தங்கள் மொபைல் போன் எண் மற்றும் இ - மெயில் போன்றவற்றை அடிக்கடி மாற்றுகின்றனர். அதனால், நாங்கள் அனுப்பும் தகவல், சில சமயங்களில், அவர்களை சென்றடைவது இல்லை. அதனால், இ - பைலிங் செய்பவர்கள் அனைவரும், தங்கள் முகவரி, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண், இ - மெயில் உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில், 'இ - பைலிங்' கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.பின், மொபைல் போனுக்கு, ஓ.டி.பி., எனும், ஒரு முறை பயன்படுத்தும், 'பாஸ்வேர்டு' அனுப்பி, தகவல்கள் சரிபார்க்கப்படும். இதன் வாயிலாக, வருமான வரி செலுத்துவோருக்கு, தகவல் சென்று சேர்வது உறுதி செய்யப்படும்.