புதிய 200 ரூபாய் நோட்டு அதிகளவில் அச்சிட திட்டம்
மக்கள் பயன்பாட்டிற்கு, தாராளமாக கிடைக்கும் வகையில், புதிய, 200 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் அச்சிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு, நவ., 8ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததென, மத்திய அரசு அறிவித்த பின், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, புழக்கத்திற்கு வந்தன.ம.பி., மாநிலம், தேவாசில், மத்திய ரிசர்வ் வங்கியின், ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகம் உள்ளது. இந்த அச்சகத்தில், இந்த ஆண்டு, 400 கோடி எண்ணிக்கையில், பல மதிப்புகளில் ரூபாய் நோட்டுகளை அச்சிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு, மார்ச், 31க்குள், 40 கோடி, புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, ரிசர்வ் வங்கி, தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது.ரிசர்வ் வங்கியிடம், 500 ரூபாய் நோட்டுகள் போதிய அளவு இருப்பில் உள்ளதால், அதை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டு, 200 மற்றும், 20 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி துவங்கி
உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.