விடுமுறை நாட்களில் தடையின்றி ஏ.டி.எம்.,ல் பணம்: ரிசர்வ் வங்கி உத்தரவு
விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்.,களில் தடையின்றி பணம் கிடைக்க செய்யவேண்டுமென வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள் மூலம் 21 ஆயிரம் ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுகிறது. சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்திக்கு செப்., 29, அக்., 2 மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை. மாத சம்பளம் எடுத்தல், தீபாவளி ஆடை வாங்க ஏ.டி.எம்.,களை அதிகம் நாடும்போது பணதட்டுப்பாடு அதிகரிக்கும். இதை தவிர்க்க உரிய ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தேசிய வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஏ.டி.எம்.,களில் பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க, ரிசர்வ் வங்கி உத்தரவுபடி, பணம் வழங்கும் வங்கி இயங்கும். அங்கு பணத்தை எடுத்து ஏ.டி.எம்.,களில் நிரப்புவோம். ஏ.டி.எம்.,ஒன்றில் 2,000, 500, 100 ரூபாய் வீதம் 54 லட்சம் வரை வைக்கப்படும்