கிராமப்புறங்களில் அதிவேக பிராட்பேண்ட் : தொலைத்தொடர்பு துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளிலும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவை ஓராண்டுக்குள் வழங்கப்படும்,'' என, மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர், அருணா சவுந்திரராஜன் கூறினார்.
தமிழகத்தில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில் 'பாரத்நெட்' திட்டம் அமைக்க ஆலோசனை கூட்டம், கோவையில் நடந்தது. இதில் மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர், அருணா சவுந்திரராஜன் பேசியதாவது:
தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் உள்ளனர். இவர்களே, ஒளியிழை நெட்வொர்க் நிறுவி பராமரிப்பதால், கிராமப்புற மக்களுக்கு இணையதள வசதியை வழங்கலாம். இத்திட்டத்தில், 100 எம்.பி.பி.எஸ்., முதல் ஒரு ஜி.பி.பி.எஸ்., வரை, அகண்ட அலைவரிசை சேவையை, அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் வழங்க முடியும்.
இத்திட்டம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம், செயல்படுத்தப்படும். மாவட்டத்தின் எல்லா தலைமையகங்களிலும், 1 ஜி.பி.பி.எஸ்., அலைவரிசையில், இணையதள சேவை முன்பே செயல்பாட்டில் உள்ளது. அது, 2 ஜி.பி.பி.எஸ்., திறனுக்கு விரைவில் உயர்த்தப்பட உள்ளது.
பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் பைபர் கேபிள் இணைப்புகள் மூலம், மலிவு விலையில், வீடுகளுக்கு இணைய வசதி வழங்கி வருகிறது. இணையதளம் வாயிலாக, பல மகத்தான திட்டங்களை அரசு நிறுவ உள்ளதால், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான சாத்தியகூறு அதிகமாகும்,