கல்வி கடனுக்கான வட்டி மானியம் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பண மதிப்பிழப்பிற்கு பிறகு, வங்கிகளின் இருப்பு தொகைகள் அதிகரித்துள்ளதாகவும், இது நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவும் என்றும் வல்லுனர்களும், அதிகாரிகளும் முழக்கமிட்டனர்.
ஆனால் நான் இது வரை சந்தித்த தொழிலதிபர்களோ, தொழிலாளிகளோ, மாணவர்களோ, வியாபாரிகளோ இந்த அதிரடி நடவடிக்கை மூலம் பலன் அடைந்ததாக தெரியவில்லை. மாறாக அனைத்து தரப்பினரும், ஏதோ ஒரு வகையில் பாதிப்பு அடைந்ததாகவே கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த இக்கட்டான தருணத்தில், அடுத்த அதிரடியான ஜி.எஸ்.டி. மூலம் அனைத்து தொழில்களும் ஒரு குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டதாகவே அறிகிறேன். ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. புதிதாக தொழில் செய்ய விரும்புவோர் உத்வேகம் குறைந்துள்ளது. சமுதாயத்தின் எந்த பிரிவினரும் நல்ல நிதி நிலையில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
கல்வி கடன் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டிய வட்டி மானியங்கள் சுமார் 534 கோடி ரூபாய் சென்று அடையவில்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 534 கோடி ரூபாய் என்பது ஒரு தொகையாக பார்க்காமல், அதில் அடங்கி இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் அடிப்படை உதவி என்பதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.